கோலாலம்பூர், ஜூலை 19- பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (என்.கே.வி.இ.) மற்றும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு (இலிட்) சாலையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என்.கே.வி.இ. நெடுஞ்சாலையின் இரு தடங்களிலும் வடிகால் அமைப்புகள் மற்றும் வலது பாதை சம்பந்தப்பட்ட பராமரிப்புப் பணிகள் இன்று தொடங்கி அக்டோபர் 14 வரை நடைபெறும் பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் என்று அறிவித்தது.
இதில் 19.3 முதல் 20.0 கிலோமீட்டர் வரையிலான டாமன்சாரா-புக்கிட் லஞ்சன் தடமும் நெடுஞ்சாலை பயனீட்டாளர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்படும் சாலை மாற்றுப்பாதைகளும் அடங்கும்.
இதற்கிடையில், இலிட் நெடுஞ்சாலையில் ஜூலை 21 முதல் 25 வரை இரவு 11.00மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை புத்ராஜெயா-பண்டார் சௌஜனா புத்ரா தடத்தின் 19.5 முதல் 18.0 கிலோமீட்டர் வரை உள்ளடக்கிய பகுதி மூடப்படும்.
நெடுஞ்சாலை பயன்படுத்துவோர் இந்த காலகட்டத்தில் தங்கள் பயணங்களைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்து செல்லும்போது பிளஸ் பணியாளர்கள் வழங்கும் அனைத்து போக்குவரத்து வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நெடுஞ்சாலை பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் PLUS பயன்பாடு, PUTRI இயங்கலை உதவியாளர், X@plustrafik பயன்பாடு அல்லது மின்னணு அடையாளங்கள் (VMS) வழியாக சமீபத்திய போக்குவரத்துத் தகவலைப் பெறலாம் என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவசர உதவி பெற விரும்பினால் பொதுமக்கள் PLUSLine 1800-88-0000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
— பெர்னாமா


