கோலாலம்பூர், ஜூலை 19- இன்று காலை 11.00 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 60 பகுதிகளில் காற்று மாசுபாட்டு குறியீடு (ஏ.பி.ஐ.) மிதமான அளவில் பதிவாகியுள்ளது.
சபா மாநிலத்தின் கோத்தா கினாபாலு பாலிடெக்னிக், கோத்தா கினாபாலு மற்றும் கிமானிஸ் ஆகிய இடங்களிலும் சரவாக்கில் மிரி ஐ.எல்.பி., ஸ்ரீ அமான், காப்பிட், லிம்பாங் மற்றும் லாபுவான் உள்ளிட்ட எட்டு பிற பகுதிகளிலும் காற்றின் தரம் அளவு சிறப்பாக பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறையால் வழிநடத்தப்படும் மலேசிய காற்று மாசுபாட்டு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தனது அகப்பக்கத்தில் கூறியது.
எந்தப் பகுதியிலும் ஆரோக்கியமற்ற ஏ பி.ஐ. அளவு பதிவு செய்யப்படவில்லை.
சுழியம் முதல் 50 வரையிலான ஏ.பி.ஐ. அளவீடு நல்ல காற்றின் தரத்தைக் குறிக்கிறது. 51-100 மிதமானதாகவும் 101-200 ஆரோக்கியமற்றதாகவும் 201-300 மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் 300 க்கு மேல் ஆபத்தானதாகவும்
ஏ.பி.ஐ. குறியீடு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 68 காற்று தர கண்காணிப்பு நிலையங்களின் அடிப்படையில் ஏ.பி.ஐ. தரவு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது


