வாஷிங்டன் டி.சி, ஜூலை 18 - கடந்த புதன்கிழமை, உள்நாட்டு சந்தையில் வெளியிட்டப்படும் Coca-Cola பானங்களில் இனி கரும்புச் சக்கரையைப் பயன்படுத்த அதன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இம்மாற்றம் அமெரிக்க மக்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று ``Truth Social`` எனும் தமது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, High-Fructose Corn Syrup, HFCS எனப்படும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
எனினும், அதற்கு அமெரிக்காவின் சுகாதார செயலாளர் ரோபர்ட் ஃப்.கெனடி ஜே.ஆர், ``America Healthy Again`` எனும் தமது சுகாதார பிரச்சாரத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதனிடையே, Coca-Cola புற்றுநோயை ஏற்படுத்தும் பானம் என்று முன்னதாக, அனைத்துலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், IARC கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா


