குளுவாங், ஜூலை 18- பொது இடத்தில் ஆடவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை சித்தரிக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் நேற்று மாலை 5.00 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை மாலை 4.16 மணிக்கு
ஜாலான் பத்து 4 இல் உள்ள ஒரு பேரங்காடிக்கு எதிரே நிகழ்ந்தது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது என்று குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ கூறினார்.
55 வயதுடைய அந்த நபர் மெர்சிங், ஜாலான் பெசார் சாலையோரம் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், சந்தேக நபருக்கு இரண்டு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்ட வேளையில் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 377டி பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்
முன்னதாக, சாலையோரத்தில் கைப்பேசியை வைத்திருந்த ஆடவர் அநாகரீகமான செயலைப் புரிவதைக் காட்டும் 12 வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.


