NATIONAL

மூவரால் தாக்கப்பட்ட நபர் திருட்டு வழக்கில் கைது- தாக்கியவர்களுக்கு  போலீஸ் வலைவீச்சு

18 ஜூலை 2025, 3:16 AM
மூவரால் தாக்கப்பட்ட நபர் திருட்டு வழக்கில் கைது- தாக்கியவர்களுக்கு  போலீஸ் வலைவீச்சு

நிபோங் திபால், ஜூலை 18- ஆடவர் ஒருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் இத்தாக்குதல்   சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்

டிக்டோக் செயலியில்  பதிவேற்றப்பட்ட அந்த இரண்டு நிமிடம் மற்றும் ஐந்து வினாடிகள் கொண்ட காணொளி, ஆடவர் ஒருவர் மூன்று நபர்களால் அடித்து நான்கு சக்கர இயக்க வாகனத்தில் ஏற கட்டாயப்படுத்தப்படுவதை காட்டுகிறது என்று  செபராங் பிறை  செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்  ஜே ஜனவரி சியோவோ கூறினார்.

நேற்று முன்தினம் இரவு 7.16 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறிய அவர்,  நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தாக்கப்பட்ட ஆடவருக்கு தொடர்பிருப்பது  ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

மூன்று ஆடவர்கள் பாதிக்கப்பட்டவரை தலையிலும் உடலிலும் தாக்கி பின்னர் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் வாகனத்தில் ஏற்றுவதை அந்த காணொளிக் காட்சி சித்தரிக்கிறது என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.  காயம் ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325 இன் கீழ் இந்த  வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என  அவர் கூறினார்.

அதே சமயம், திருட்டு வழக்கு தொடர்பான  விசாரணைக்காக  கைது செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்  ஜூலை 20 வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.