நியூ யார்க், ஜூலை 17 - இந்தியா, அகமதாபத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்திற்கு, அதன் இயந்திரத்திற்கு செல்லும் எரிபொருள் தடைப்பட்டதே காரணம் என்று Wall Street Journal தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த விமானத்தின் கேப்டன் விமானத்தின் இரு இயந்திரங்களுக்கு செல்ல வேண்டிய எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விசையை நிறுத்தியது கருப்பு பெட்டியில் உள்ள உரையாடல் பதிவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக WSJ கூறுகிறது.
அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் ஆதாரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த தகவலை அவர்கள் வெளியிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா தனது போயிங் 787 ரக விமானங்களில் விமான எரிபொருள் கட்டுப்பாட்டு விசையில் (சுவிட்ச்சில்) பரிசோதனையை மேற்கொண்டது.
அதில் எரிபொருள் விசைகளில் எந்தப் பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
-பெர்னாமா


