வெனிஸ், ஜூலை 17 - நேற்று 2026ஆம் ஆண்டுக்கான மிலானோ-கொர்டினோ குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படவுள்ள பதக்கங்களின் மாதிரிகளை அதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டனர்.
புதிய வடிவமைப்பில் வெளியிடப்படவிருக்கும் அந்த பதக்கங்கள் விளையாட்டு ஆர்வலர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அதாவது பதக்கத்தின் முன்பகுதியில் ஐந்து வளையங்களுடன் இருக்கும் ஒலிம்பிக்கின் சின்னம் பதிக்கப்பட்டுள்ளது மற்றும் பின்பகுதியில் நிகழ்ச்சியை விவரிக்கும் மற்றும் இடத்தை நினைவுகூரும் ஒரு குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, தனி சின்னத்தின் இதே வடிவமைப்பு பாராலிம்பிக் போட்டிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி, வெனிசில் இந்த பதக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், இத்தாலியின் ஓய்வுப் பெற்ற நீச்சல் வீரர்களான பெடெரிக்கா பெலெகிரினி மற்றும் ஃபிரான்செஸ்கா பொர்செலெட்டோ கலந்து கொண்டனர். இவ்விருவரும் குளிர்காலம் மற்றும் கோடைகாலப் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர்கள் ஆவர்.
எதிர்வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 245 தங்கப்பதக்கங்கள், 245 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 245 வெண்கல பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
-பெர்னாமா


