லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 17 - நேற்று, அலாஸ்கா கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால், அப்பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணி நேர நிலநடுக்கத்திற்குப் பிறகு, முன்னர் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை அதிகாரிகள் முற்றிலும் ரத்து செய்தனர்.
இதே போல கடந்த ஜூலை 2023 இல் அலாஸ்கா தீபகற்பத்தில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


