ஷா ஆலம், ஜூலை 17- இவ்ண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அம்பாங்கில் உள்ள சுங்கை கெராயோங்கில் உணவுக் கழிவுகள் மற்றும் மாசுபடுத்தும் பொருள்களைக் கொட்டிய தரப்பினருக்கு அம்பாங் ஜெயா நகராட்மைக்கழகம் (எம்.பி.ஏ.ஜே.) 83 குற்றப்பதிவுகளை வழங்கியுள்ளது.
,அதே காலகட்டத்தில் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து 517 உணவகங்கள் மற்றும் மேடான் செலேரா எனப்படும் உணவு தொகுதிகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
அந்த 83 குற்றப்பதிவுகளும் 2007ஆம் ஆண்டு உணவு ஸ்தாபன உரிமச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.
ஆற்றுப் பகுதியைச் சுற்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வாயிலாக வெளியேற்றப்படும் கழிவுகள் நீர் தர அளவுக்கு ஏற்ப அமையவில்லை என்றால் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம்
அது குறிப்பிட்டது.
நகர்ப்புற சேவை மற்றும் சுகாதாரத் துறை எப்போதும் தனது நிர்வாகப் பகுதியின் கீழ் உள்ள ஆற்றுப் பகுதிகளில் அவ்வப்போது கண்காணிப்பை மேற்கொள்கிறது.
வெளியேற்றப்படும் கழிவுகளில் பெரும்பாலானவை உணவுக் கழிவுகள் மற்றும் உணவகங்கள், உணவு தொகுதிகள் மற்றும் ஆற்றுக்கு அருகிலுள்ள குடிசை வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் என்பது இந்த கண்காணிப்பின் அடிப்படையில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறியது.
சுங்கை கெராயோங் ஆற்றின் குறுக்கே பாண்டன் ஜெயா இலகு ரயில் டிரான்சிட் (எல்ஆர்டி) நிலையத்திற்குச் செல்லும் பாதசாரி நடைபாதையில் வீசும் கடுமையான துர்நாற்றம் ஆடைகளிலும் படர்வதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.


