இஸ்தான்புல், ஜூலை 17- சிரிய தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேலிய இராணுவம் நேற்று புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகரில் உள்ள பொதுப் பணியாளர் வளாகம் மற்றும் காசர் அல்-ஷாப் என்று அழைக்கப்படும் அதிபர் மாளிகையை குறிவைத்து இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியாவின் செய்தி நிறுவனமான சானா தெரிவித்தது.
டமாஸ்கஸ் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அடர்ந்த புகை எழுவதையும் காட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
டமாஸ்கஸ் மீது "வலுவானத் தாக்குதலை" நடத்தப்போவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சூளுரைத்த சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.


