NATIONAL

இந்தோனேசியாவுக்கு 19 விழுக்காடு வரி விதிக்கப்படும் - டோனல்ட் டிரம்ப்

16 ஜூலை 2025, 7:34 AM
இந்தோனேசியாவுக்கு 19 விழுக்காடு வரி விதிக்கப்படும் - டோனல்ட் டிரம்ப்

வாஷிங்டன், ஜூலை 16 - இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் வழி அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 19 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார்.

"இந்தோனேசியா மீது எங்களுக்கு முழு அணுகல் உள்ளது. நாங்கள் எந்த வரியையும் செலுத்த மாட்டோம். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தோனேசியாவிற்குள் நுழைய எங்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள். அதுதான் ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பகுதியாக இருக்கலாம். மற்றொரு பகுதி அவர்கள் 19% வரி செலுத்தப் போகிறார்கள்," என்றார் டோனல்ட் டிரம்ப்.

அமெரிக்காவின் சிறிய வர்த்தக பங்காளியாக இந்தோனேசியா இருந்தாலும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பிற சிறிய நாடுகளுக்கான வரி விகிதங்களை நிர்ணயிக்கும் கடிதங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று டிரம்ப் விவரித்தார்.

அதிக வரிகளைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கான கொள்முதல்களை உறுதி செய்வதற்கான வர்த்தக ஒப்பந்தத்தை, இந்தோனேசியாவுடன் அமெரிக்கா எட்டியது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.