ஹூஸ்டன், ஜூலை 16 - இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த அனைத்துலக விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்.
18 நாட்கள் ஆய்வு முடிவடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் SpaceX மூலம் பூமிக்குத் திரும்பினர்.
அமெரிக்காவின் பெக்கி விட்சன், இந்தியாவின் சுபன்ஷு சுக்லா, ஹங்கேரியின் திபோர் கபு, போலந்தின்ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸனீவ்ஸ்கி ஆகியோர் கடந்த ஜூன் 25ஆம் தேதி விண்வெளிக்கு சென்றனர்.
ஆக்சியம் 4 திட்டத்தில், ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேர் கொண்ட குழு புறப்பட்டது.
டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லா குழுவினர் கலிபோர்னியா கடற்கரையில் வந்து இறங்குவார்கள் என கூறப்பட்டது.
அனைத்துலக ஆய்வு மையத்தில் 7 முக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துவிட்டு இக்குழு திரும்பியது.
பெர்னாமா


