இஸ்தான்புல், ஜூலை 16 - கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 58,479 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கடந்த செவ்வாயன்று தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 93 பேரின் உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்ட வேளையில் மேலும 278 பேர் காயமடைந்ததாக அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இத்த எண்ணிக்கையுடன் சேர்த்து இஸ்ரேலிய தாக்குதல்களால் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 139,355 பேராக உயர்ந்துள்ளது.
மீட்புக் குழுக்களால் அணுக முடியாததால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் தெருக்களிலும் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கை விளக்கியது.
கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது ஆறு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 29க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. இதனுடன் சேர்த்து மே 27ஆம் தேதி போர் நிறுத்தம் முறிவடைந்தது முதல் 5,604க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேசமயம், உதவி கோரும் போது கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 18 அன்று காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் தொடங்கியது முதல் இதுவரை 7,656 பேர் கொல்லப்பட்டதோடு 27,314 பேர் காயமடைந்தனர்.


