ஷா ஆலம், ஜூலை 16: ஜூலை 1 முதல் 20 வரை நடைபெறும் சிலாங்கூர் (ஐகோன் அக்ரோ) *வேளான் பிரபலம்* தேடல் திட்டத்தில் பங்கேற்க வேளாண் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2020 முதல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டம், விவசாயம், கால்நடைகள், மீன்வளர்ப்பு, வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் வேளாண் சுற்றுலா பிரிவுகளில் போட்டியிடுவதாக வேளாண் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
சிலாங்கூர் ஐகோன் அக்ரோ *(வேளான் பிரபலம்)* 2025 திட்டம் 2024ஆம் ஆண்டுடன் இணைக்கப்படும் மற்றும் கடந்த ஆண்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பங்கேற்பாளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்று டத்தோ இர் இஷாம் ஹாஷிம் விளக்கினார்.
"அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் பங்கேற்பாளர்கள் சிலாங்கூர் ஐகோன் அக்ரோ 2024/2025ஆகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், தலா RM10,000 மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் மற்றும் விவசாய உள்ளீட்டு உதவியை பெறுவார்கள்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
ஆர்வமுள்ளவர்கள் https://agroselangor.com/web/forms-ikon2025.php என்ற இணைப்பில் படிவத்தை நிரப்பலாம்.
இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான தேவைகள் பின்வருமாறு:
- பங்கேற்பாளர்கள் குறைந்தது ஓர் ஆண்டு காலம் வேளான் துறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்
- சிலாங்கூர் மாநிலத்தில் வேளாண் திட்டத்தை மேற்கொள்ளுதல்
- பணியாற்றப்படும் திட்டம் செல்லுபடியாகும் நிலையைக் கொண்டுள்ளது
- சொந்த பெயரில் ஒரு SSM (Ent, PLT, Sdn Bhd) வைத்திருத்தல்
- குறைந்தது 12 மாதங்களுக்கு நிதி அறிக்கை பதிவு வைத்திருக்க வேண்டும்
- சங்கங்கள்/கூட்டுறவுகளுக்கு, வணிகத்துடன் முழுமையான மற்றும் செயலில் உள்ள சுயவிவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


