கோலாலம்பூர், ஜூலை 16 - சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை தனது முன்னாள் காதலியை கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்
சம்பந்தப்பட்ட பெண் மீது ஏற்பட்ட அதிருப்தியே 21 வயதான சந்தேக நபர் இத்தாக்குதலை
நடத்தியதற்கு காரணம் என்பது தொடக்கக்கட்ட விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.
வீட்டை விட்டு வெளியேற விடாமல் தாம் தடுத்ததாக தனது முன்னாள் காதலி பொய் கூறியதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சந்தேக நபர் இச்செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்
பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணும் வெளிநாட்டு நாட்டவர் ஆவார். அப்பெண் தற்போது மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்த புகாரைப் பெற்றதைத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதை வான் அஸ்லான் நேற்று உறுதிப்படுத்தினார்.


