ANTARABANGSA

அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கால் வைத்த முதல் இந்தியர்

15 ஜூலை 2025, 8:59 AM
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கால் வைத்த முதல் இந்தியர்

புதுடில்லி, ஜூலை 15 - பூமிக்குத் திரும்பும் வழியில் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கால் வைத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா படைத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

திங்கள் அன்று நான்கு பணியாளர்களுடன் கூடிய ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) (Axiom -4) அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டதை நேரடி ஒளிபரப்புகள் காட்டின. அவர்களின் தரையிறக்கம் 24 மணி நேரத்திற்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1984ஆம் ஆண்டு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாரஷ்ய சோயுஸ் விண்கலத்தில் பறந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு, விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் சுக்லா ஆவார்.

ஆக்ஸ்-4 என்பது ஹூஸ்டனை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸால் (Axiom Space) இயக்கப்படும் ஒரு வணிக விமானமாகும். இது தேசிய வானூர்தியியல் மற்றும் நாசா விண்வெளி நிர்வாகம், இந்திய விண்வெளி நிறுவனம் (ISRO), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.

இன்று மாலை மணி 3 அளவில் சுக்லா பூமியை வந்தடைவார் என இந்திய அறிவியல் அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.