ஷா ஆலம், ஜூலை 15 - ஷா ஆலம் சுதந்திர சதுக்கத்தில் வார இறுதியில் நடைபெற்ற ஷா ஆலம் வாகனம் இல்லாத தின நிகழ்ச்சியில் 8,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகளாக எம் பி.எஸ்.பி பாத்தேக் ஃபன் ரன், ரக்கான் மூடா காலர் ஃபன் ரன், சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சிறப்பு பங்கேற்பு ஆகியவை இடம் பெற்றதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் கூறியது.
இவை தவிர, ஏரோபிக்ஸ், ஷா ஆலம் இளைஞர் பசார், ஷா ஆலம் கேலரியின் கைவினை நடவடிக்கை, நடமாடும் நூலகம், அங்கிரிக் வெண்ணிலா நூலகத்தில் கைவினை நடவடிக்கை மற்றும் ஷா ஆலம் ஆன் வீல்ஸ் சேவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன என அது குறிப்பிட்டது.
இந்த வாகனமில்லா நிகழ்ச்சியை ஷா ஆலம் டத்தோ டத்தோ முகமட் பவுசி முகமட் யாத்திம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மேலும் எம்.பி.எஸ்.பி. குழுமத்தின் தலைமை வியூக அதிகாரி டத்தோ அஸ்லான் ஷாரிம், மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.எஸ்.ஏ. சமூக மேம்பாட்டு இயக்குநர் ஷாரின் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
நகரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் மாநகர் மன்றம் மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு அமைகிறது.


