பெங்களூர், 14 ஜூலை - பழம்பெரும் நடிகை சரோஜா தேவி முதுமையின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.
மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
''கன்னடத்துப் பைங்கிளி'', '' அபிநய சரஸ்வரி'' போன்ற அடைமொழிகளில் அழைக்கப்படும் அவர் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து திரைப்படத்துறையில் வலம் வந்தார்.
ஐம்பது ஆண்டுகால தமது திரைப் பயணத்தில் 200 படங்களுக்கு மேல் நடத்திருக்கும் அவர், உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஶ்ரீ உட்பட இன்னும் பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.
அவரது மறைவுக்கு திறையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


