ஷா ஆலம், ஜூலை 14- தனது மனைவிகளின் பாலியல் வீடியோக்களை விநியோகித்தது தொடர்பான சுயேச்சைப் பேச்சாளருக்கு எதிரான வழக்கு உட்பட இரண்டு விசாரணை ஆவணங்கள் இந்த வாரம் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும்.
மேலும், ஒன்பது, 13, 14 மற்றும் 19 வயதுடைய சிறார் மற்றும் பதின்ம வயதினரை பாலியல் வன்கொடுமை செய்தாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பாகிஸ்தானிய நபர் தொடர்பான வழக்கும் துணை சட்டத்துறைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் முகமது இக்பால் இப்ராஹிம் சொன்னார்.
பாகிஸ்தானிய நபர் சம்பந்தப்பட்ட ஓரினச்சேர்க்கை வழக்கு மற்றும் சயேச்சை சமயப் பேச்சாளர் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை இந்த வாரம் சட்டத்துறைத் துணைத் தலைவரிடம் பரிந்துரைக்கப்படும்.
அடுத்தக்கட்ட நிலவரங்கள் குறித்து நான் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்று அவர் இன்று வாட்ஸ்அப் மூலம் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, செக்சன் 27 மற்றும் செக்சன் 28 வட்டாரத்தில் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானியரை போலீசார் கடந்த ஜூலை 8 ஆம் தேதி கெடாவின் கோலா நெராங்கில் கைது செய்தனர்.
அந்த பாகிஸ்தானிய சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு புகலிடம் அளித்து உதவியதாக நம்பப்படும் ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டார்.


