காசா, ஜூலை 14- காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 58,026 பேராக உயர்ந்துள்ளது. அதே சமயம், கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் இப்போரில் 138,520 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் காஸா மீதான தாக்குதல்களை கடந்த மார்ச் 18 இல் மீண்டும் தொடங்கியது முதல்
மொத்தம் 7,450 பேர் இறந்துள்ளதோடு 26,479 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 24 மணி நேரத்தில் உதவி தேடிச் சென்ற 28 பேர் கொல்லப்பட்டதாகவும் 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்
தெரிவிக்கப்பட்டது. இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 833 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,400க்கும் மேற்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு 139 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.
இடிபாடுகளுக்கு அடியிலும் சாலையிலும் இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்து வரும் தாக்குதல்கள் காரணமாக மருத்துவ மற்றும் மீட்புக் குழுக்களால் அந்த இடத்தை அணுக முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


