(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 13- கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் கருத்தரங்கு புத்ரா ஹைட்ஸில் அமைந்துள்ள சீபீல்டு தமிழ்ப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்ப்பள்ளி மாணவர்ள் மத்தியில் ஆங்கில மொழித் திறனை வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் , வலுவான ஆங்கி ழொழியாற்றலின் வழி இளம் தலைமுறையினருக்கு ஆக்கத் திறனளிக்கும் நோக்கில் ஆந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.
ஆங்கிலம் என்பது வெறும் மொழியல்ல. அது உலகில் உள்ள வாய்ப்புகளை பெறுவதற்கான திறவுகோள் என அவர் குறிப்பிட்டார்.
முன்னேற்றத்தை நோக்கி நகருங்கள். நடக்க இயலாவிட்டாலும் பாதகமில்லை, தவழ்ந்தாவது இலக்கை அடையுங்கள். நம்மைப் பற்றி பலர் பலவிதமாகப் பேசலாம் கவலையில்லை. உங்கள் வாழ்க்கையை யாரும் தீர்மானிக்க முடியாது. நீங்கள் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். நீங்கள் என்னவாக ஆக வேண்டும் நீங்களே தீர்மானியுங்கள். அந்த இலக்கை நோக்கி பயணியுங்கள் என அவர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சிறப்பு பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் சிறப்பு பிரமுகர்களாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன், கோத்தா கெமுனிங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் எம். கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.


