ஷா ஆலம், ஜூலை 11- கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் சேதமடைந்த வீடுகளில் பழுதுபார்க்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்தி செய்ததற்கு மந்திரி புசார் நன்றி தெரிவித்தார்.
வீட்டு வாடகை உதவி, வீடுகளை பழுதுபார்த்து கட்டுதல் உள்பட பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தமது தரப்பு தொடர்ந்து போராடும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார் .
அரசாங்கத்தால் பழுதுபார்க்கப்பட்ட வீடுகளிகளில் மறுபடியும் குடியேறிய குடியிருப்பாளர்கள் உள்ளனர். உதவி வழங்கிய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும் நாங்கள் மறக்கவில்லை.
பேரிடர் நிகழ்ந்து 100 நாட்கள் ஆன நிலையிலும் மாநில அரசு அவர்களின் நலன் காக்கப்படுவதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. வாடகை உதவி மற்றும் வீடுகளை பழுதுபார்த்து கட்டும் நடைமுறை தொடரும். இது எங்கள் உறுதிப்பாடு என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில், தீ 30 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு எழுந்தது. வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டிய நிலையில் தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.


