ஷா ஆலம், ஜூலை 10 - முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்தைக் கட்டுவதற்கு வழங்கப்பட்ட நிலம் குறிப்பிட்ட காலத்திற்குள் மேம்படுத்தப்படாவிட்டால் அந்நிலத்திற்கான ஒப்புதலை மாநில அரசு திரும்பப் பெறக்கூடும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
திரும்பப் பெறப்பட்ட நிலம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் என்று ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலா துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறினார்.
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிசம் (லிமாஸ்) சமய சிறப்புக் குழு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 400 நிலங்களை அங்கீகரித்துள்ளது.
மாநில சட்டமன்றத்தில் இன்று சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ல்வி கியான் கியோங் எழுப்பிய துணை கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த வழிபாட்டுத் தலமும் கட்டப்படாவிட்டால் மாநில அரசு நிலத்தை திரும்பப் பெறும் என்று கூறினார்.


