கோலாலம்பூர், ஜூலை 10 - பேராக், சிம்பாங் பூலாயில் சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதில் JPJ வாகனம் ஒன்று சாலையின் இரட்டைக் கோட்டில் ஆபத்தான முறையில் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்லும் காட்சி பாதிவாகியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாகப் புகார் கிடைத்த உடனே நோட்டீஸ் வெளியிடப்பட்டு அந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார். ஓட்டுநரின் அச்செயலைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதாக அவர் சொன்னார்.
அவ்வாடவர் ஏற்கனவே இது போன்ற தவறுகளைச் செய்துள்ளாரா என்பதும் கண்டறியப்பட்டு வருகிறது.
சாலை விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் சாலைப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று ஃபாட்லி ரம்லி கூறினார்.
JPJ வாகனமொன்று சாலையின் இரட்டைக் கோட்டில் ஆபத்தான முறையில் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்லும் 12 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.


