கோலாலம்பூர், ஜூலை 10 - மலேசியாவுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரியை விதிக்க அமெரிக்கா எடுத்த சமீபத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து, மலேசியா அரசாங்கம் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்.
அடுத்த ஆகஸ்ட் மாதம் வரி விகிதம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு மலேசியா நாட்டிற்கு பொருத்தமான வாதங்களை முன்வைக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"எங்கள் நாடு ஒரு வர்த்தக நாடு என்பதை பேச்சுவார்த்தை நடத்தி விளக்க ஒரு குழுவை நாங்கள் அனுப்பியுள்ளோம். எனவே மலேசிய பொருளாதாரத்தில் ஏற்படும் எந்தவொரு எதிர்மறையான தாக்கமும் பிராந்தியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்."
"நிச்சயமாக, அமெரிக்காவுடனான எங்கள் உறவு பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், மலேசியா ஒரு வர்த்தக நாடு என்ற எங்கள் நிலைப்பாட்டையும் நாங்கள் பராமரிப்போம், எனவே, வரி கட்டண விகிதம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்வோம்," என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


