காஸா, ஜூலை 9 - கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து காஸா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57,575 பேராக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்கள் என்று பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.
மேலும், அந்தக் காலகட்டத்தில் குறைந்தது 136,879 பேர் காயமடைந்தனர் என்று அது குறிப்பிட்டது.
கடந்த மார்ச் 18 அன்று இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியதிலிருந்து குறைந்தது 7,013 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள வேளையில் 24,838 பேர் காயமடைந்துள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் அடிப்படைத் தேவைகளைப் பெற முயன்ற போது எட்டு பேர் கொல்லப்பட்டு மேலும் 74 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொல்லப்பட்ட மொத்த உதவி நாடுவோரின் எண்ணிக்கை 766 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, 5,044 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை பதிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் இடிபாடுகளுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்கள் உட்பட 52 பேரின் உடல்களும் காயமடைந்த 452 பேரும் காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


