NATIONAL

ஆசியாவின் வயது முதிர்ந்த யானை தனது இறுதி மூச்சை விட்டது

9 ஜூலை 2025, 7:54 AM
ஆசியாவின் வயது முதிர்ந்த யானை தனது இறுதி மூச்சை விட்டது

புதுடில்லி, ஜூலை 9 - நேற்று இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பானா புலிகள் காப்பகத்தில், ஆசியாவின் வயது முதிர்ந்த பெண் யானை வத்சலா (Vatsala) இறந்தது.

உடல் உறுப்புக்கள் செயல் இழந்ததால் கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த பானாவின் பழமையான மற்றும் மிகவும் பிரியமான யானை, தனது இறுதி மூச்சை விட்டதாக வனத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

அந்த பெண் யானை கேரளாவிலிருந்து நர்மதாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் பானா புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்தியா மட்டுமின்றி அனைத்துலக சுற்றுப்பயணிகளுக்கு ஈர்ப்பான விலங்காகவும் வத்சலா திகழ்ந்தது என கூறப்பட்டது. 100 வயதுக்கு மேலாக வத்சலா உயிர் வாழ்ந்த போதிலும் நீண்ட காலமாக நோயுடன் போராடி வந்ததுள்ளது.

மேலும், மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் பெற்றெடுக்கும் போது, வத்சலா ஒரு பாட்டியாக மாறி யானைக் குட்டிகளை பராமரித்ததாக தெரிவிக்கப்பட்டது.

அது தனது இறுதி நாட்களை Hinauta முகாமில் கழித்தது. அங்குள்ள வன ஊழியர்கள் அதனை அன்புடன் பராமரித்து வந்ததோடு அதன் இறுதிச் சடங்குகளை மிகவும் மரியாதையுடன் நடத்தினர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.