ஜார்ஜ்டவுன், ஜூலை 9 - சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பகடிவதைக்கு உள்ளான T.நவீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரின் தற்காப்பு வாதத்தை நவம்பர் 17 முதல் 25ஆம் தேதி வரை பினாங்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும், 26 வயது ஜே.ராஜசுதன், எஸ்.கோகுலன் உட்பட மேலும் இருவரின் வாதங்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் புதிய தேதிகளை நிர்ணயித்துள்ளது.
ஐந்தாவது குற்றவாளியை கூட்டரசு நீதிமன்றம் விடுவிப்பது குறித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்காக இன்னும் காத்திருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிபதி டத்தோ முஹமட் ரட்ஸி அப்துல் ஹமிட் அத்தேதியை நிர்ணயித்தார்.
மேலும், சாட்சிகள் மீண்டும் அழைக்கப்படுவதோடு அண்மைய தகவல்களைப் பெறுவதற்கு வழக்கு செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்து விடுதலை செய்த பினாங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அரசு தரப்பு மேல்முறையீட்டை அனுமதித்த பின்னர், நால்வரும் தங்களின் வாதங்களை முன்வைக்க, ஜனவரி 13-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெர்னாமா


