ஷா ஆலம், ஜூலை 8 - அண்மையில் நிகழ்ந்த சமயப் பள்ளி மேம்பாட்டு நிதி மோசடி தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சுயேச்சை சமயப் பேச்சாளர் ஒருவர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 140,000 வெள்ளியை உட்படுத்திய இந்த மோசடி தொடர்பில் 39 வயதான சந்தேக நபரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான உத்தரவை மாஜிஸ்திரேட் முகமது ரெட்சா அசார் ரெசாலி இன்று பிறப்பித்தார்.
இந்த மோசடி வழக்கு தொடர்பாகக் கோம்பாக் மற்றும் ஷா ஆலம் மாவட்டங்களில் காவல்துறைக்கு இரண்டு புகார்கள் கிடைத்ததுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் முன்னதாகக் கூறியிருந்தார். இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் 40 வயதுடைய இரு உள்ளூர் பெண்களும் அடங்குவர்.


