கோலாலும்பூர், ஜூலை 8 - அண்மையில், மோனோரயிலின் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்கள் வழக்கத்தை விட மெதுவாக நகர்கின்றன என்றும் ரேப்பிட் கே.எல் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஒவ்வொரு நிலையத்திலும் அதிக நேரம் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்றும் இச்சிக்கல் தொடர்பாக உதவி ஏதும் தேவைப்பட்டால் பயணிகள் நிலைய அதிகாரிகளை தொடர்புக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இரயில் பாதை புதுப்பிப்புகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்குப் பொதுமக்கள் ரேப்பிட் கே.எல் அகப்பக்கத்தை நாடலாம். இந்த தடங்கலுக்கு ரேப்பிட் கே.எல் குழுவினர்கள் மன்னிப்பும், மக்களின் பொறுமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்


