பிலிப்பைன்ஸ், ஜூலை 7 - கடந்த சனிக்கிழமை அன்று, பிலிப்பைன்ஸ் தால் எரிமலையில், கடந்த 24 மணி நேரத்தில், இரண்டு முறை நிலநடுக்க அதிர்வுகளை கண்டறிந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
இருந்தபோதும் எரிமலைகளில் நிலநடுக்கம் ஏற்படும்பொழுது இயல்பாக தெரியக்கூடிய அறிகுறிகளான எரிமலைப் புகை (vog) அல்லது சூடான திரவங்கள், மேல்நோக்கி எழுவதைக் காண முடியவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், தால் எரிமலை அசாதாரண நிலையில் உள்ளது மற்றும் எரிமலை வெடிப்பின் அச்சுறுத்தல் இன்னும் காணப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
இந்த தால் எரிமலை பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய எரிமலை ஆகும். இதில் 38 முறை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


