ANTARABANGSA

பெருவில் 3,500 ஆண்டுகள் பழைமையான நகரம் கண்டுபிடிப்பு

7 ஜூலை 2025, 4:06 AM
பெருவில் 3,500 ஆண்டுகள் பழைமையான நகரம் கண்டுபிடிப்பு

லீமா, ஜூலை 7 - பெருவில் 3,500 ஆண்டுகள் பழைமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Penico என அழைக்கப்படும் இந்நகர மையம், வடக்கு Barranca மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கிமு 1800 முதல் 1500 காலப்பகுதியில் நிறுவப்பட்டது.

மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் ஆரம்ப நாகரிகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில், பசிபிக் கடற்கரை கலாச்சாரங்களை ஆண்டிஸ் மற்றும் அமேசானில் உள்ளவற்றுடன் இணைக்கும் வர்த்தக மையமாகவும் 3,500 ஆண்டுகள் பழமையான பெனிகோ நகரம், செயல்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அந்நகர மையம் ஒரு மலைத்தொடர் மேடையில் உள்ள வட்டவடிவ அமைப்பாக இருப்பது, ஆளில்லா விமானத்தின் காட்சிகள் காட்டுகின்றன.

அது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட கல் மற்றும் மண் கட்டடங்களின் பாகங்களையும் கொண்டுள்ளது.

அந்த இடத்தில் எட்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், கோயில்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உட்பட 18 கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது அமெரிக்காவின் பழமையான நாகரிகமாகக் கருதப்படும் Caral எனும் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இடத்திற்கு அருகிலேயே உள்ளது குறிபப்பிடத்தக்கது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.