சிரம்பான், ஜூலை 5- இங்குள்ள ஒரு பேரங்காடியில் அமைந்துள்ள ஹோட்டல் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் உள்ளூர் நபர் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து இரவு 8.17 மணிக்கு தங்களுக்கு புகார் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து பேரங்காடியின் முதல் மாடியில் சிக்கிக் கொண்ட அந்த 59 வயது நபர் இறந்துவிட்டது மருத்துவக் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டது.
இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அறிக்கை கூறியது.


