புதுடெல்லி, ஜூலை 3 - அகமதாபாத் விமான விபத்து நடந்த இரண்டு நாட்களுக்குள், டெல்லியில் இருந்து வியன்னாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலையால் விபத்துக்குள்ளாகும் நிலையிலிருந்து தப்பியது.
கடந்த மாதம் ஜூன் 14ஆம் தேதி AI-187 விமானம் இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. மோசமான வானிலையால் திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வரத் தொடங்கியது.
முதல் கேப்டன் மற்றும் துணை விமானி ஆகியோர் 777 போயிங் விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து, பின்னர் அதை வியன்னா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர்.
அந்த விமானிகள் இருவரையும் விமான நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், விமான ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.


