SELANGOR

பாலர் பள்ளி கட்டண உதவித் திட்டத்திற்கு இப்போது தொடங்கி விண்ணப்பிக்கலாம்

3 ஜூலை 2025, 10:38 AM
பாலர் பள்ளி கட்டண உதவித் திட்டத்திற்கு இப்போது தொடங்கி விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூலை 3 - மாதம் 50.00 வெள்ளி கட்டண மானியத்தை வழங்கும் சிலாங்கூர் பாலர் பள்ளி உதவித் திட்டத்திற்கான (துனாஸ்) விண்ணப்பங்கள் ஜூலை 1ஆம் முதல் திறக்கப்பட்டுள்ளன.

தகுதியுள்ள சிறார்களுக்கான விண்ணப்பங்களை tunas.yawas.com.my என்ற இணைப்பின் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று சிலாங்கூர் யாவாஸ் எனப்படும் சிறார் பாரம்பரிய அறக்கட்டளை  அறிவித்துள்ளது.

இந்த உதவி ரொக்கமாக வழங்கப்படுவதில்லை. மாறாக, கல்விக் கட்டணமாகப் பதிவு செய்யப்பட்ட பாலர்  பள்ளி நிர்வாகத்திடம் நேரடியாகச் செலுத்தப்படும்  என்று அது தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

பதிவுசெய்யப்பட்ட பாலர்  பள்ளிகளின் பட்டியல் குறித்த தகவல்களை https://tunasv2.yawas.my/admin/list_tadika.php என்ற இணைப்பின் மூலம் காணலாம்.

இந்த பாலர் பள்ளி கட்டண உதவித் திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டது.  2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சிலாங்கூர் முழுவதும் 21,236 பெற்றோர்கள் இந்த துனாஸ்  திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.