ஜெர்தெ, ஜூலை 2 - கடந்த சனிக்கிழமை, திரங்கானு பெர்ஹெந்தியான் தீவில் மூன்று பயணிகள் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய படகு ஓட்டுநரின் தடுப்புக் காவல் மேலும் ஒரு நாள் அதாவது வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று அந்த தடுப்பு காவல் உத்தரவை பெசுட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி நுலியானா முஹமாட் சுக்ரி பிறப்பித்தார்.
ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15 (1) (a) இன் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு உதவுவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகக் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநர் திங்கட்கிழமை முதல் மூன்று நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த படகு விபத்தில் 40 வயதான எஸ்.ஆறுமுகம், 3 வயதான ஏ.சார்விகா மற்றும் 10 வயதான வி.வெண்பனி ஆகியோர் உயிரிழந்தனர்.
பெர்னாமா


