சிப்பாங், ஜூலை 2 - புதிய கே.எல்.ஐ.ஏ Aerotrain செயல்முறை முன்பைக் காட்டிலும் வேகமாகவும் சீராகவும் இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் முதலாவது முனையத்தில் செயல்படும் Aerotrain செயல்முறையைப் பார்வையிட்ட பின்னர், பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், Malaysia Airports குழும நிறுவனம், MAHB நிர்வாக இயக்குநர், டத்தோ முஹமட் இசானி கானி மற்றும் MAHB மூத்த அதிகாரிகளுடன் இணைந்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் Aerotrain செயல்முறையை நேரில் கண்டார்.
புதிய Aerotrain செயல்முறையை பிரதமரே சோதித்துப் பார்த்தார். Contact Pier-ரில் இருந்து Satelit கட்டிடத்திற்கு ரயிலில் பயணம் செய்த அவருக்கு அச்சேவையின் மேம்பாடுகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
45 கோடியே 60 லட்சம் ரிங்கிட் செலவிலான மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு நவீன Aerotrain சேவை, நேற்று முழுமையாக செயல்படத் தொடங்கியது.
பெர்னாமா


