NATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து  சூழியல் முறைக்கு சிலாங்கூர் இரயில் தடம் அடித்தளம் - மந்திரி புசார்

2 ஜூலை 2025, 11:50 AM
கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து  சூழியல் முறைக்கு சிலாங்கூர் இரயில் தடம் அடித்தளம் - மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூலை 2 - பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக  எதிர்காலத்திற்கான தயார்நிலை  ரயில் சூழலியல்  அமைப்பை உருவாக்கும் வகையில் சிலாங்கூரில் ரயில் சூழல்  அமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது  என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மற்றும் மலேசியா முழுவதும் திறமை மேம்பாடு, தொழில் உருமாற்றம் மற்றும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை ஆதரிப்பதில்  இது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

சிலாங்கூருக்கான உள்கட்டமைப்பு உருமாற்ற மேம்பாட்டின் இலக்குகளை சீரமைப்பதற்காக ரயில் துறையில் முக்கிய பங்களிப்பாளர்களை ஒன்றிணைத்த சிலாங்கூர் ரயில் தொழில் மன்றத்தின் கூட்ட எண். 1/2025க்கு நான் தலைமை தாங்கினேன்.

மலேசியாவின் முக்கிய ரயில் வலையமைப்பின் குறிப்பிடத்தக்க பகுதியை சிலாங்கூர் கொண்டிருப்பதால் இந்த சந்திப்பு முக்கியமானது. இதில் பயணிகள் சேவைகள், மாஸ் ரெப்பிட் டிரான்சிட், லைட் ரெப்பிட் டிரான்சிட், கிழக்கு கரை ரயில் தடம் மற்றும் சரக்கு ரயில் பாதைகள் ஆகியவை அடங்கும்.

இது மாநிலத்தை தேசிய போக்குவரத்து சூழல் அமைப்பிற்குள் ஒரு முக்கியமான மையமாக மாற்றுகிறது என்று அவர் நேற்றிரவு தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் அவர் தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவது மற்றும் சிலாங்கூர் ஏரோ பூங்காவின் (எஸ்ஏபி) முழு திறனையும் உணர்ந்து கொள்வதில் 'விடுபட்ட இணைப்பாக' செயல்படுவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட கித்தா சிலாங்கூர் ரயில் திட்டம் ஆகியவை  இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சங்களில்  ஒன்றாக விளங்குகிறது.

பரிந்துரைக்கப்பட்ட இந்த  ரயில் தடம் தொழில்துறை மண்டலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம், சுபாங் விமான நிலையம், போர்ட் கிளாங் மற்றும்  கேரித் தீவு உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து மையங்களை இணைக்கும் என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.