கோலாலம்பூர், ஜூலை 2 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கு தொடர் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
நேற்று தொடங்கி இத்தாலிக்கு மூன்று நாள் பணி பயணத்துடன் தொடங்கிய பிரதமரின் தொடர் பயணங்கள், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உலக அளவில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மலேசியாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
பிரதமரின் முதல் இத்தாலி பயணம் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது என்று இத்தாலிக்கான மலேசிய தூதர் டத்தோ ஜாஹிட் ரஸ்தம் கூறினார்.
"இந்த பயணம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மலேசியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"மேலும், இந்த பயணம் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வேளாண் பொருட்கள் துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட புதிய முயற்சிகளை ஆராய்வதில் அரசாங்கத்தின் உறுதியையும் காட்டுகிறது," என்று அவர் கடந்த திங்களன்று ரோமில் இருந்து கூகிள் மீட் தளம் மூலம் மலேசியாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதில் இறுதியாக, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உட்படுத்திய கூட்டமைப்பின் ஓர் உறுப்பிய நாடாக, மலேசியாவைப் பிரதிநிதித்து, BRICS உச்சநிலை மாநாட்டில் டத்தோ ஸ்ரீ அன்வார் கலந்து கொள்வார்.


