அங்காரா, துருக்கி, ஜூலை 1 - கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கி துருக்கி வனப்பகுதியில், காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.
அதனால், 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக வெளியேற்றி தற்காலிகமாகப் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றியுள்ளனர் என்று உள்ளூர் பேரிடர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், காட்டுத் தீயால் ஏற்பட்ட புகையினாலும் மற்றும் பிற பிரச்சனைகளாலும் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் தீயிலிருந்து தற்காத்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பலத்த காற்றினால் தீயை கட்டுப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
துருக்கியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் இத்தகைய பிரச்சனைகளைக் களையும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் ஈடுபட வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


