கோத்தா கினபாலு, ஜூலை 1- விற்பனை வரி மறுஆய்வு மற்றும் பொருள் சேவை வரியின் (எஸ்.எஸ்.டி.) வரம்பு விரிவாக்கம் ஆகியவற்றின் அமலாக்கத்திற்கு ஏற்ப ஓப் கெசான் 4.0 இயக்கத்தின் அமலாக்க ஆக்கத்தன்மையை உறுதி செய்ய உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மூன்று அணுகுமுறைகளை முன்னெடுக்கவுள்ளது.
விலை தரவுகளை திரட்டுவது, அமைச்சின் விலை கண்காணிப்பு அதிகரிகளால் தினசரி விலை தொடர்பான தரவுகளைச் சேகரிப்பது ஆகியவையும் அணுகுமுறைகளில் அடங்கும் என்று அதன் அமைச்சர் டத்தோ அர்மிஸாம் முகமது அலி கூறினார்.
எஸ்.எஸ்.டி.யின் அமலாக்கத்திற்கு முன்னரும் பின்னரும் விலை மற்றும் சேவைக் கட்டணத்தில் காணப்படும் வேறுபாடுகளை ஒப்பிடுவதற்கு இந்த தரவுகள் அடிப்படையாக விளங்கும் என அவர் சொன்னார்.
சபா மாநிலத்தில் உணவு மற்றும் பான விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு வணிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முறைகேடு மற்றும் வீண் விரயத்தை தடுக்கும் நோக்கிலான கித்தா கெம்புர் இயக்கத்தின் அமலாக்கத்திற்கு ஏற்ப அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை அமைச்சு வலுப்படுத்தும், அதேவேளையில் பொதுமக்களின் பங்கேற்பையும் வரவேற்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதை உறுதி செய்ய கட்டணம், விலை மற்றும் விநியோகம் தொடர்பான சீரான செயலாக்க்க நடைமுறை அமலாக்கப்படும் என்றும் அவர் சொன்னார். மக்கள் அமைச்சிடம் தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாகப் புகார் அளிப்பதற்கான தளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
விலையேற்றத் தடுப்புச் சட்டத்திற்கு புறம்பாக பொருள் விலைகளை நியாயமற்ற முறையில் உயர்த்தும் வணிகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு 100,000 வெள்ளி வரை அபராதம், மூன்றாண்டுச் சிறைத்தண்டனையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 500,000 வெள்ளி வரை அபராதமும்
விதிக்கப்படும் என அவர் கூறினார்.


