ஷா ஆலம், ஜூலை 1 : விபத்து ஏற்பட்டால் வாகனங்கள் ஆபத்தான பொருட்களை மோதுவதை தடுக்க சாலையோரங்களில் உள்ள எஃகு தடுப்புக்கு மாற்றாகப் பாலிமர் தடுப்பு அல்லது 'ரோலர் தடுப்பு' பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.
பேருந்துகள் அல்லது லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது பாதுகாப்பாளராக செயல்படும் திறனுடன் இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது என்று சாலை பாதுகாப்பு நிபுணர்கள் சங்கத்தின் (PPKJR) நிறுவனர் ஜமீல் மனன் சுப்ரி கூறினார்.
இந்த அமைப்பு வாகனங்களை அசல் பாதைக்கு திருப்பி, மோதல்களின் தாக்கத்தையும் மரண அபாயத்தையும் குறைக்கும் திறன்களை கொண்டது என்றார்.
"எஃகு தடைகள் (தற்போது பயன்படுத்தப்படுகின்றன) விபத்துகளின் தாக்கத்தை மோசமாக்குகின்றன. உதாரணத்திற்கு கெரிக் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்து எஃகு தடைகளால் ஏற்படும் ஆபத்தை காட்டியது.
"எனவே, அரசாங்கம் எஃகு தடுப்புக்கு மாற்றாக 'ரோலர் தடுப்பின்` பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், ஆபத்தான வளைவுகள், மலைப்பாங்கான அல்லது செங்குத்தான பகுதிகளில் கவனம் செலுத்து வேண்டும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
மலேசியாவில் ரோலர் தடுப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால். அதிக செலவு காரணமாக சில வழித்தடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
"பிபிடிகளின் கூற்றுப்படி அவைகளின் பயன்பாடு அதிகம் இல்லை. அதிக விலை காரணமாக, அவை அனைத்து இடங்களிலும் நிறுவ வேண்டிய அவசியமில்லை, ஆபத்தான பகுதிகளில் கவனம் செலுத்துங்கள் என்றார்.
"குறைந்த ஆபத்துள்ள பாதைகளுக்கு, W-பீம் மற்றும் thrie-பீம் போன்ற பாதி நெகிழ்வான தடுப்புகளை பயன்படுத்தலாம். இவை உலகின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன," என்று அவர் கூறினார்.


