செத்தியூ, ஜூன் 30 - திரங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் பெசாருக்கு செல்லும் வழியில் அலையடித்து படகு கவிழ்ந்து மூவர் மரணமடைந்த சம்பவத்தில், படகு ஓட்டுநர் 3 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் 22 வயதான அந்த ஓட்டுநரை காவல்துறை தடுத்து வைத்து விசாரிக்க, செத்தியூ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி நூர்லியானா முகமட் சுக்ரி அனுமதி வழங்கினார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952இன் பிரிவு 15 (1) (a) இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதற்காக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
படகு விபத்துக்குப் பிறகு சிறுநீர் பரிசோதனையில் அவ்வாடவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது. மேலும், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் அந்நபர் மீது ஏற்கனவே 5 குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.


