ஜெர்த்தே, ஜூன் 30 - சொந்த முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களின் எந்தவொரு நடவடிக்கையையும் உயர்கல்வி நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும். இதில் விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு சுற்றுலா பேருந்தை வாடகைக்கு எடுப்பது மற்றும் பிற நடவடிக்கைகள் அடங்கும்.
மாணவர்களை உட்படுத்தி தேவையற்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க இது அவசியமானது என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
ஜூன் 9ஆம் தேதி நிகழ்ந்த கொடூரமான விபத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்யும் நேரம் உட்பட பல்வேறு கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சு ஆராய்ந்து வருவதாக சம்ரி கூறுகினார்.
அதாவது பல்கலைக்கழக மாணவர்களின் பயணங்கள் பகலில் மேற்கொள்ளப்படுவதையும், இனி இரவில் அல்ல என்பதையும் உறுதி செய்வது உட்பட, மேம்பாடுகளுக்கான பல்வேறு கருத்துக்களையும் பரிந்துரைகளையும் தனது தரப்பு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
மாணவர்கள் எதிர்கொள்ளூம் பிரச்சனைகள் குறிப்பாக இறப்புகள் உட்படுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அமைச்சு எப்போதும் விரைவாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
பெர்னாமா


