சிரம்பான், ஜூன் 30 - வங்காளதேச ஆடவரின் உடல் நேற்று காலை இங்கு அருகிலுள்ள கெமாஸ், கம்போங் கெமாஸ் ஆற்றில் மிதக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.
46 வயதான அத்தொழிலாளியின் மரணம் குறித்து நேற்று காலை 9.55 மணிக்கு தமது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக தம்பின் மாவட்டப் போலீஸ் தலைவர் அமிருடின் சரிமான் தெரிவித்தார்.
அந்த வங்காளதேச இளைஞர் கடந்த வியாழக்கிழமை ஜெமாஸில் உள்ள பங்கா உலு கிராம நீர் பம்ப் பகுதியில் நீரில் மூழ்கி இறந்தது விசாரணையில் தெரியவந்தது என்று அவர் சொன்னார்.
மீன் பிடிக்க வலை அமைக்கும் போது ஆற்றில் தவறி விழுந்த அவ்வாடவர் 13 கிலோமீட்டர் தூரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தம்பின் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு உடல் அனுப்பப்பட்டதாகவும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.


