NATIONAL

வளர்ப்பு மகள் துன்புறுத்தல் - பெண்மணி கைது

30 ஜூன் 2025, 10:31 AM
வளர்ப்பு மகள் துன்புறுத்தல் - பெண்மணி கைது

ஷா ஆலம், ஜூன் 30 - கோல சிலாங்கூர், உள்ள தாமான் பெண்டஹாராவில் தனது வளர்ப்பு மகளான ஒரு சிறுமியை  துன்புறுத்தியதோடு அவரின் நலனை புறக்கணித்தது தொடர்பான விசாரணைக்கு  உதவும் வகையில்  ஒரு பெண்ணை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமது தரப்ப்புக்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து 54 வயது பெண் கைது  இரவு 8.15 மணிக்கு கைது செய்யப்பட்டதாகக் கோல சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசாஹருடின் தாஜூடின் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமி தற்போது தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அதே சமயம் விசாரணைக்கு உதவ சந்தேக நபரை நேற்று தொடங்கி   புதன்கிழமை (ஜூலை 4) வரை ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கோல சிலாங்கூர் காவல்  நிலையத் தலைமையக  நடவடிக்கை அறையை 03-3289 1222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள  காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டு சிறார்  சட்டத்தின் 3(1) பிரிவின கீழ் விசாரிக்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.