கோலாலம்பூர், ஜூன் 30 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமை புதிய தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் நேற்று சந்தித்தார்
அரச மலேசிய போலீஸ் படையின் கௌரவ ஆணையராகவும் இருக்கும் பேரரசருக்கும் காலிட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஜோகூர் பாருவில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமாரும் பங்கேற்றதாக சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் ஐ.ஜி.பி.பணியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து காலிட் புதிய ஐ.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
— பெர்னாமா


