தமது தரப்பு தற்போது சம்பந்தப்பட்ட மாணவர்கள் குறித்த முழுமையான தகவல்களைச் சேகரித்து வருவதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ நோரைனி அகமது கூறினார்.
நிரந்தர முடத்தன்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களை சமூக நலத்துறை அணுகும். பிறகு விண்ணப்பத்தை பரிசீலிக்க உதவும் என்று அவர் சொன்னார்.
எத்தனை மாணவர்கள் நிரந்தர முடத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து நாங்கள் தற்போது தரவுகளை சேகரித்து வருகிறோம். மருத்துவர்களிடமிருந்து கருத்துகள் எங்களுக்குத் தேவை என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று குபாங் மெனெருங்கில் நடைபெற்ற கப்பளா பத்தாஸ் அம்னோ இளைஞர், மகளிர், புத்ரி பிரிவு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
தங்களின் கண்காணிப்பின் அடிப்படையில் அவர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது தரப்பு இன்னும் ஆலோசக சேவைகளைத் தொடர்கிறது என்று கூறினார்.
விபத்தில் சிக்கிய பெரோடுவா அல்சா ஓட்டுநரின் குடும்பத்தினருக்கும் ஆலோசனை அமர்வுகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.


