கோலாலம்பூர் ஜூன் 28 ;- பிலிப்பைன்ஸின் மிண்டனாவோவில் இன்று காலை 7:07 மணிக்கு 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் தலாத் தீவுக்கு வடக்கே 141 கி. மீ. தொலைவில் 109 கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) தெரிவித்துள்ளது.
இருப்பினும், மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.


