இதன் மூலம் வெளிநாட்டு தீவிரவாதிகளின் வலையமைப்பு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட மூன்று கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் விஐஏ அத்தியாயத்தின் கீழ் குற்றச் செயலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பேர் ஷா ஆலம் மற்றும் ஜோகூர் பாரு பிரிவு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.
மேலும் 15 நபர்களை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 16 நபர்கள் தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரிக்கப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தக் கும்பல் இஸ்லாமிய அரசின் (ஐஎஸ்) சித்தாந்தத்தின் அடிப்படையில் தீவிரவாத நம்பிக்கைகளை நாட்டிற்குள் கொண்டு வருவது காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவின் உளவுத்துறை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் கண்டறிப் பட்டதாக அவர் கூறினார்.
தீவிரவாத நம்பிக்கைகளை அவர்களுக்குள் புகுத்துவதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி சேகரிப்பதற்கும் சொந்த நாட்டில் உள்ள சட்டபூர்வமான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் அந்தக் கும்பல் தங்கள் சமூகத்திற்குள் ஆட்சேர்ப்புப் பிரிவுகளையும் உருவாக்கியதாக சைஃபுடின் சொன்னார்.
மலேசியா எந்த ஒரு வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்திற்கும் ஒரு புகலிடமாக இருக்காது, ஒரு நாசவேலை செய்யும் இடமாகவும் இருக்காது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என அவர் வலியுறுத்தினார்.


